Image: Web சமீபத்தில் நடந்து முடிந்த கனடா பொதுத் தோ்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆச்சரியமளிக்கத்தக்க வெற்றியை பெற்று அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. ட்ரூடோ இம்முறை வெற்றி பெறமாட்டார் என்றே பெரும்பாலான கருத்துகணிப்புகள் ஆரூடம் சொல்லியிருந்த நிலையில் அதையெல்லாம் பொய்யாக்கி வெற்றியை ருசித்திருக்கிறார் அவர். பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் சக கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக கனட கூட்டரசின் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ. தமிழர்களின் மனம்கவர்ந்த சர்வதேசத் தலைவராக விளங்கும் ஜஸ்டின் ட்ரூடோ யார்,? முன்னாள் பிரதமரின் மகன்: 49 வயதாகும் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் இரண்டாவது இளமையான பிரதமர் என்ற சிறப்புக்கு சொந்தக்காரர். மேலும், கனடாவின் முதல் வாரிசு பிரதமர் என்ற பெருமைக்கும் உரியவர். இவரது தந்தையான பொ்ரி ட்ரூடோ கனடாவின் 15வது பிரதமராக இருந்துள்ளார். தந்தையின் இறுதி காலத்தை ஒட்டி அரசியலுக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ அதற்கு முன் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். லிபரல் கட்சியில் படிப்படியாக பதவியை அடைந்த இவர், 2015 தோ்தலில் லிபரல் கட்சியை தலைமையேற்று வ...